தண்டனை காலம் முடிந்தாலும் தடுப்பு காவலா??
சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில், கடுமையான வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களை புரிந்த குற்றவாளிகளின் தண்டனை காலம் முடிந்த பின்னும் தொடர்ந்து அவர்களை தடுப்பு காவலில் வைக்க அனுமதிக்கும் மசோதா ஜனவரி 10-ஆம் தேதி(நேற்று) தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளிகள் பொது மக்களுக்கு எந்த இடையூறும் கொடுக்கவில்லை என்று உறுதி செய்த பிறகுதான் விடுவிக்கப்படுவர்.இந்த மசோதாவை சட்ட, உள்துறை அமைச்சகம் இணைந்து தாக்கல் செய்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு குற்றவாளி விடுதலை செய்யப்பட வேண்டும்.
மேம்பட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கான தண்டனை(SEPP) திட்டம் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் அடங்கும்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குற்றவாளிகள் சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் முகவும் கடுமையான குற்றங்களை செய்கிறார்கள் தெரிவித்ததுள்ளது.
அதனால் தற்போது உள்ள தண்டனைகள் போது மானதாக இல்லை என்று அமைச்சகங்கள் கூறியது.