சிங்கப்பூரில் சொத்துச் சந்தை தொடர்ந்து மேம்பட்டு வருவதால் நிதியைக் கையாழுவதில் வெளிப்படையாக செயல் பட வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond lee கூறினார்.
உலகில் நிச்சயமற்ற சூழ்நிலையால் சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறதாக அவர் கூறினார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்படும் மந்த நிலை. உலகளவில் அரசியல் பதற்றமும் இதற்கு காரணமாக அமையும் என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள சொத்துச் சந்தை நிலவரத்தையும் குறிப்பிட்டார். பண வீக்கத்தால் உலகில் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதாக கூறினார். அதிக வட்டி கடன் வரம்பைக் கடுமையாக இருந்த போதும், வீட்டுக் கடன் நாட்டில் பெறும் அம்சமாக இருக்கிறது.
வட்டி விகிதம் அதிகரித்தால் உள்நாட்டிலும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்.இதனால், கடன் வாங்குனவர்கள் மட்டும் இல்லாமல், புதிதாக வாங்க நினைப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.