51 வயதுடைய Lim jen hee என்பவர் iPhone பழுதுபார்ப்பு நிறுவனத்தின் முன்னாள் துணை மேலாளர் ஆவார். அவர் மீது கடந்த 2021-ஆம் ஆண்டில் வழக்கு ஒன்று பதிவானது. ஊழியர் ஒருவருடன் சேர்ந்து பழுதாகி உள்ள iPhone மொபைல்களை விற்று வந்துள்ளார்.
மொபைல்களை 100 லிருந்து 550 வெள்ளி விலைக்கு விற்று உள்ளார். அதன் மூலம் அவர் 3.1 மில்லியன் வெள்ளி பணத்தை ஈட்டியுள்ளார்.
அவர் மீது வழக்குப் பதிவானதை தொடர்ந்து அதனை எதிர்த்து தற்காப்பு வாதத்தை முன் வைத்தார். ஆனால்,நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது.
அவருடைய குற்றத்திற்காக 9 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் அவருக்கு உடந்தையாக இருந்த Serene Ng Shu Kian என்ற ஊழியருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் இணைந்து 25,501 மொபைல்களை விற்றுள்ளனர்.
சுமார் 5.1 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான பணத்தை 18 மாதங்களில் சம்பாதித்துள்ளனர்.
அவர்களின் மோசடி செயலை iPhone நிறுவனத்தின் கணக்காய்வாளர் நடத்திய அதிரடி சோதனையில் தெரியவந்தது.
Lim தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.லிம் 120,000 வெள்ளி பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.