சிங்கப்பூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு!!

சிங்கப்பூரில் ஜூலை 14-ஆம் தேதி முதல் 20 தேதி வரை 236 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மாதம் 22-ஆம் தேதி நிலவரப்படி 10,141 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவான டெங்கு சம்பவங்களின் எண்ணிக்கையை விட இவ்வாண்டு அதிமாக பதிவாகியுள்ளது.

இவ்வாண்டில் இதுவரை 10,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு 9949 டெங்கு பாதிப்புகளும், 2022-ஆம் ஆண்டில் 32173 டெங்கு பாதிப்புகளும் பதிவாகின.

டெங்கு பாதிப்புகள் சிங்கப்பூரில் 70 இடங்களில் கண்டறியப்பட்டது.

தேசிய சுற்றுப்புற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் 10 இடங்கள் danger zone பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆபத்தான பகுதிகள் எனக் கூறப்படும் பகுதிகளில் 10 அல்லது அதற்கும் அதிகமான பாதிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

அதில் ஜூரோங் வெஸ்ட்(அவென்யூ 1,அவென்யூ 2,ஸ்ட்ரீட் 42) ஒன்று.

இதுவரை அங்கு 103 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.