சிங்கப்பூரில் சர்க்கிள் லைனில் ஒரு ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
வழக்கமான பராமரிப்பு ஆய்வின் போது இன்று (செப்டம்பர் 29) அதிகாலை 2.20 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக SMRT நிறுவனம் அதன் முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
இதனால் ரயில்கள் மெதுவாக இயங்கின. போக்குவரத்தும் தாமதமடைந்தது.
இதனை SMRT நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இரு வழிகளான Dhoby Ghaut முதல் Promenade Station மற்றும் Marina Bay முதல் Stadium Station வரை இயக்கப்படும் ரயில்கள் மெதுவாக இயங்கும் என்று கூறியது.
அதனால் பயணிகளுக்கு கூடுதலாக 30 நிமிட பயணம் நேரம் ஆகலாம்.
இந்த கோளாறு Promenade நிலையத்திலிருந்து Esplanade மற்றும் Promenade நிலையத்திலிருந்து Bayfront நிலையங்களுக்கு செல்லும் பாதையில் கண்டறியப்பட்டது.
கோளாற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.
பயணிகளிடம் SMRT நிறுவனம் மன்னிப்பு கோரியது.
பணிகள் தங்கள் பயணத்தை வடக்கு-தெற்கு லைன், கிழக்கு-மேற்கு லைன் மற்றும் Downtown லைன் மூலம் பயணங்களை மேற்கொள்ளுமாறு SMRT நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.