ஜோகூரில் ஜூன் 26-ஆம் தேதி சிங்கப்பூரின் விவாகரத்துறை, ஜோகூர் மற்றும் புக்கிட் அமான் வணிகப் புலனாய்வு துறைகள் ஒன்றிணைந்த கூட்டு சோதனையை நடத்தியது.
தாமான் பெர்லிங்கில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நால்வரும் மலேசியா குடிமக்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களுடைய நோக்கத்தின் பின்னணி பற்றி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் திட்டமும் முறியடிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்களை குறிவைத்து மோசடி செயலில் ஈடுபட திட்டம் தீட்டியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக சிண்டிகேட் செயல்பட்டு வந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
சுமார் $2.9 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இல்லாத வேலைகளை சிண்டிகேட் வழங்கியதாகவும், அதற்கு 59 பேர் ஏமாந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் மலேசியர்கள் எவரையும் குறிவைக்கவில்லை.
அவர்கள் மோசடி செயலுக்காக உள்ளூர் வங்கி கணக்குகளை பயன்படுத்தி கொள்ளவில்லை என்று நேற்று (ஜூலை 14) ஜோகூர் காவல்துறை தலைவர் டத்தோ கூறினார்.
நால்வரும் மீதும் கைது வாரண்ட் சிங்கப்பூர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 30-ஆம் தேதியன்று மூன்று ஆண்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை ஜூலை 5-ஆம் தேதியன்று நாடு கடத்தப்பட்டார்.