சிங்கப்பூரில் ஓட்டுநர் வகுப்புகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிவு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் வகுப்புகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த முடிவு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஓட்டுநர் பள்ளிகளுக்கு வெளிநாட்டு பயிற்றுனர்களை பணியமர்த்த போக்குவரத்து காவல்துறை அனுமதி வழங்கும் என உள்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்.

Class 4 ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் பேருந்து,பெரிய லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டலாம்.

Class 4 ஓட்டுநர் வகுப்பு உரிமத்திற்கு அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் விண்ணப்பித்ததாலும், பயிற்றுவிப்பாளர்களின் பற்றாக்குறை காரணமாக காத்திருப்பு நேரம் அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

Class 4 ஓட்டுநர் வகுப்புகளுக்கு நீண்ட நேரம் காத்திருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்து அமைச்சர் திரு.சண்முகம் கூறுகையில், கடந்த ஆண்டு (2023) அக்டோபர் முதல் இந்த ஆண்டு (2024) செப்டம்பர் வரை ஓட்டுநர் வகுப்புகளைத் தொடங்குவதற்கான சராசரி காத்திருப்பு நேரம் சுமார் ஐந்து மாதங்கள் இருந்ததாக கூறினார்.

இதனை சமாளிக்க Class 4 ஓட்டுநர் வகுப்புகளை வழங்க கூடுதல் ஓட்டுநர் நிலையங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய போக்குவரத்து காவல்துறை தயாராக உள்ளதாக திரு.சண்முகம் தெரிவித்தார்.