பென்குயின்களை தாக்கும் கொடிய பறவை காய்ச்சல்!!

பென்குயின்களை தாக்கும் கொடிய பறவை காய்ச்சல்!!

அண்டார்டிகா அருகே முதன்முறையாக ஜென்டூ பென்குயின்களில் கொடிய வகை பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதி அன்று 200 பென்குயின் குஞ்சுகள் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள ஃபாக்லாண்ட் தீவுகளில் ஜனவரி 19ஆம் தேதி அன்று சுமார் 35 பென்குயின்கள் இறந்ததாக அவர்கள் கூறினர்.

இதனால் அண்டார்டிகாவில் மிகப்பெரிய பென்குயின் காலனிகளில் இந்த வைரஸ் பரவக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

அப்பகுதியில் காணப்படும் மற்ற உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும், பாதுகாவலர்கள் கவலைப்படுகின்றனர்.