Lakeside Park – இன் நடைபாதையில் 48 வயது மதிக்கதக்க நபரின் சடலம்!!

Lakeside Park - இன் நடைபாதையில் 48 வயது மதிக்கதக்க நபரின் சடலம்!!

சிங்கப்பூர்: லேக்சைட் பூங்காவின் நடைபாதையில் 48 வயதுடைய நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடைந்தார்.

இச்சம்பவம் குறித்து ஜூலை 25 அன்று மாலை 3 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தனர்.

உடனே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ டெலிகிராமில் பகிரப்பட்டுள்ளதாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீடியோவில், சம்பவம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டதைக் காணலாம்.

காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதையும் காணலாம்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அந்த நபரின் மரணத்தை உறுதி செய்தது.

மேலும் இது தொடர்பாக காவல்துறை நடத்திய முதற் கட்ட விசாரணையில் இது ஒரு கொலை இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.