சிங்கப்பூர் ஒலிம்பிக் வீரருக்கு நிதி ஆதரவு அளிக்க உள்ளதாக DBS அறிவிப்பு!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் கைட் ஃபோய்லர் நீர் சாகச வீரரான மெக்சிமிலியன் மேடெருக்கு DBS வங்கி நிதி ஆதரவு அளிக்கும் என்ற தகவலை அறிவித்துள்ளது.
அந்த ஆதரவு நான்கரை ஆண்டுகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேடெர் ஒலிம்பிக்கிற்காக பாரிஸ் செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிதி உதவி ஒரு மில்லியன் வெள்ளியைத் தாண்டும் என்று CNA கூறுகிறது.
மேடெர் தனது 16 வயதில் குறிப்பிடதக்க சாதனையை படைத்துள்ளார். அவர் மூன்று முறை ஃபார்முலா கைட் இளைஞர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டு முறை உலகப் பதக்கத்தையும் வென்றவர்.
மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார். இவர் தனது தாய்மொழி ஆங்கிலத்தை தவிர மாண்டரின்,ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
தேசிய சேவையை 2028 வரை ஒத்திவைக்க அவருக்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க இந்த அனுமதி வழங்கப்பட்டது.
தேசிய சேவை ஒத்திவைக்கப்படுவதால் அவர் முழு கவனத்துடன் பயிற்சியில் ஈடுபட முடியும் என்பதற்காக இந்தச் சலுகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Follow us on : click here