மீண்டும் தென்னப்பிரிக்கா அதிபராக சிரில் ரமபோசா!!
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக
சிரில் ரமபோசாவை அந்நாட்டின் பாராளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.
ஆளும் கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சிக்கும்,எதிர்க் கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து அவர் தேர்வு செய்யப்பட்டார்.
திரு.ரமபோசா புதிய கூட்டணியை பாராட்டி நம் நாட்டில் உள்ள அனைவரின் நலனுக்காகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தனது உரையாடலில் தெரிவித்தார்.
தேசிய சட்டமன்றம் புதிய நிர்வாகத்தில் அதிகாரத்தை யார் வகிப்பார்கள் என்பதனை உறுதி செய்வதற்காக மாலை வரை வாக்கெடுப்பு நடந்தது.கடந்த மாதம் நடந்த தேர்தல்களில் 30 ஆண்டுகளில் முதன்முறையாக ANC பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்தது.
அந்த கட்சி யாருடன் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் போடப்பட்டது.
Fikile Mbalula ஒப்பந்தத்தை `குறிப்பிடத்தக்க நடவடிக்கை’ என்று ANC செகரட்டரி-ஜெனரல் கூறினார்.
மீண்டும் தென்னப்பிரிக்கா அதிபராக சிரில் ரமாபோசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Follow us on : click here