பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?…..

தெற்கு பிரேசிலை சூறாவளி தாக்கி வருகிறது. வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கிட்டத்தட்ட 24 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கான பிரேசிலியர்கள் உயரும் நீரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தங்கள் உடமைகளை எடுத்து வைத்துள்ளனர்.

தென் மாநிலமான, Rio Grande Sul-ல் உள்ள Passo Fundo நகரில் 21 பேர் இறந்ததை மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அண்டை மாநிலமான, Santa Catarina-வில் கூடுதலாக ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், Mucum-ல் உள்ள வீடுகள் நீரில் மூழ்கின. தெருக்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஆலங்கட்டி மழையால் டஜன் கணக்கான வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் Rio Grande Do Sul-ல் தொடர்பு இல்லாமல் உள்ளனர்.

பிரேசிலின் கூட்டாட்சி அரசாங்கம் பேரழிவிற்கு பதிலளிக்க சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களை காப்பாற்ற தேவையான அனைத்தையும் தனது அரசாங்கம் செய்யும் என்று ஜனாதிபதி Luiz Inacio Lula da Silva உறுதியளித்தார்.