கரையைக் கடந்த பெஞ்சல் புயல்…!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!!

கரையைக் கடந்த பெஞ்சல் புயல்...!!! மழை நீடிக்க வாய்ப்பு..!!!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது.

பெஞ்சல் புயலானது தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது.

இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

‘பெஞ்சல்’ புயலானது மணிக்கு 90 கிமீ வேகத்தில் வீசியது.

தமிழகத்தின் வடக்கு பகுதி, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் போன்ற பகுதிகள் மழை நீரால் வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

மழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

500 பேர் நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக சென்னை விமான நிலைய சேவை இன்று காலை வரை ரத்து செய்யப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளன.

மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடை வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.