சூறாவளி…… விமானங்கள் ரத்து….

Saola சூறாவளி Hong Kongல் மரங்களை சேதப்படுத்தியது. பிறகு தெற்கு சீனாவில் வீசியது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுவரை Hong Kong ல் உயிரிழப்புகள் ஏதுமில்லை மற்றும் குறைந்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சூறாவளி பலத்த காற்றுடன் வீசுவதால் மக்கள் கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்தது மற்றும் வெள்ளம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தைவானின் இரண்டு முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளன. மேலும் கடற்கரைகள் மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து மக்களை விலகி இருக்குமாறு அரசாங்கம் எச்சரித்துள்ளது.