சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! வழக்குப்பதிவு!!

சாலை விதிகளை மீறிய சைக்கிளோட்டிகள்!! வழக்குப்பதிவு!!

சிங்கப்பூர்:சாலை விதிகளை மீறியதாக 6 சைக்கிள் ஓட்டுநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 10 ஆம் தேதி,அவர்கள் ஸ்காட்ஸ் சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலையில் சாலை விதிகளை மீறி சைக்கிள் ஓட்டிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் சரியான பாதுகாப்பு ஹெல்மெட் அணியவில்லை என்றும் நம்பப்படுகிறது.

ROADS.sg முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், இளைஞர்கள் சாலையில் ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு செல்வதைக் காணலாம்.

அஹ்மத் நூர்தினி முகமது நூர்ஷா, முஹம்மது இர்ஃபான் முகமது நூர்,முஹாய்தி மார்ஹாதி, முகமது அலியுல் கத்ரி முகமது ரசாக் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

மீதமுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், சிறார் சட்டத்தின்படி அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

பெரும்பாலான சைக்கிள் ஓட்டிகள் 2 குற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

20 வயதான முகமது அலியுல் மீது அதிகபட்சமாக 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலையின் இடது பாதையில் சைக்கிள் ஓட்டும் குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

முறையான தலைக்கவசத்தை அணியத் தவறினால் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.

மேலும் ஓட்டுநர்கள் முறையான சாலை விதிகளை கடைபிடித்து பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.