சைபர் கிரைம் அச்சுறுத்தல்..!! அப்பாவி மக்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிய அரசாங்கம்..!!

சைபர் கிரைம் அச்சுறுத்தல்..!! அப்பாவி மக்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிய அரசாங்கம்..!!

சிங்கப்பூர்: சைபர் கிரைம் எனப்படும் இணைய ஊடுருவல் வலையில் சிக்கும் குறிப்பிட்ட சில பிரிவினரைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இது போன்ற மோசடிவலைகளில் அறியாமல் சிக்கி தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை கூட அறியாதவர்கள் உண்டு.

அரசின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் எதிர்கொள்ளும் அனைத்து அச்சுறுத்தல்களிலும், இணைய ஊடுருவல் மிகவும் கவலைக்குரியது என்று இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறினார்.

இணைய ஊடுருவல் சம்பவங்கள் 2022 ஐ விட கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் மோசடி சம்பவங்கள் அதிகமாக நடந்தது. அந்த ஆண்டில் மட்டும் 46,563 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் பதிவான 31,728 சம்பவங்களை விட 46.8 சதவீதம் அதிகமாகும்.

இதனால் சுமார் 650 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

சீருடைப் பிரிவின் தேசிய தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருமதி தியோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சீருடை அணிந்த அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என 180 பேர் கௌரவிக்கப்பட்டனர். மேலும் 11 நிறுவனங்கள் மற்றும் 4 குழு திட்டங்களும் பாராட்டப்பட்டன.