பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!!

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலாச்சார போட்டிகள்!!

பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில்
வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஏற்பாட்டில் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. சென்னை மேலாண்மை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணையின்படி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி திட்ட இயக்குநர் ரேவதி ஆலோசனையின்படி பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பண்முக கலாச்சார விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன் (கிராம ஊராட்சிகள்) தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வீரையன்
( வ,ஊ) முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் வீரையன்
( வ,ஊ) முன்னிலை வகித்தார்.வட்டார இயக்க மேலாளர் மெய்யப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு மூலம் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்திடவும், சுகாதாரத்தினை பேணி காக்கவும், திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களை உருவாக்கிடவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வீட்டிற்கு ஒரு மரம் கட்டாயம் வளர்க்கும் பழக்கத்தை வளர்க்கவும், உலக வெப்பமயமாதலை தடுக்கவும் பெருகி வரும் மாசு கட்டுப்பாட்டினை மேம்படுத்தவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும் பண்முக கலாச்சார போட்டிகளான குழுப்பாடல்,குழு நாடகம்,கயிறு இழுத்தல்,கபாடி,கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும் மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.