RCB-யிடம் தோல்வியை தழுவிய CSK அணி..!! தோனியின் மீது கோபத்தில் உள்ள CSK ரசிகர்கள்..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் RCB அணி CSK அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு RCB தனது வெற்றியை உறுதி செய்தது.
சென்னை அணி கிட்டத்தட்ட 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியிடம் படுதோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பீல்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
அதன் பிறகு, களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒன்பதாவது ஆளாக களம் இறங்கிய தோனியை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது.அதிரடியாக விளையாட முயன்ற CSK அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
சீக்கிரமே களத்தில் இறங்கி ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ். தோனி, 9வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது.13வது ஓவரில் சிவம் துபே ஆட்டமிழந்தபோது தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அஸ்வின் களமிறங்கினார். இது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
அவர் ஆட்டமிழந்து 16வது ஓவரில் தோனி களமிறங்கியபோது, சென்னை அணி முற்றிலும் தோல்வியடையும் நிலையில் இருந்தது.
அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஆனால் அது போட்டியின் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷராகக் கருதப்படும் தோனி, இவ்வளவு தாமதமாக வந்ததை ரசிகர்கள் விரும்பவில்லை.
இதற்கு அவர் மரியாதையுடன் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இர்ஃபான் பதான் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் கூட தோனி 9வது வீரராக களம் இறங்கியது குறித்து விமர்சித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan