பலம் பெறும் சிஎஸ்கே அணி..!! பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..!!!

பலம் பெறும் சிஎஸ்கே அணி..!! பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..!!!

ஐபிஎல் 2025 சீசனில் மற்ற அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி 200 ரன்கள் எடுத்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி மட்டுமே மோசமாக விளையாடி திணறி வருகிறது.

இதன் விளைவாக, சிஎஸ்கே 7 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தோனி அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி, இரண்டு வீரர்கள் காயமடைந்ததால் சிஎஸ்கே அணியில் புதிய வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி ருதுராஜுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவையும்,சிஎஸ்கே வீரர் குர்பன்னீத் சிங்குக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பிரவிஸையும் சேர்த்துள்ளது.

ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன்-ஐ சிஎஸ்கே அணியில் சேர்த்தால் சிஎஸ்கேவின் பேட்டிங் தரமாக அமையும். சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ஷேக் ரசித் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை இணைத்தால் ஓப்பனிங் சிறப்பாக அமையும்.

ஆனால் சிஎஸ்கே அணி ரச்சினுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரில் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. விஜய் ஷங்கரும் பெரிய ஷாட்களை விளையாடுவதில்லை. ராகுல் திருப்பாதியும் மோசமாக விளையாடுகிறார்.

அவருக்குப் பதிலாக சிஎஸ்கே அணி பிரவீஷை இந்த இடத்தில் சேர்க்க உள்ளது. இதன் மூலம், ரெய்னாவின் இடத்தை பிரவீஷ் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரவீஷ் வலுவான இன்னிங்ஸ்களை விளையாடும் திறன் கொண்டவர். இருப்பினும், அவரது முழு திறமையும் இன்னும் வெளிப்படவில்லை.

அதிரடியாக விளையாடக்கூடிய வான்ஸ் பேடியையும் சிஎஸ்கே மிடில் ஆர்டரில் சேர்க்கப் போகிறது. இந்த மாற்றங்கள் நடந்தால், சிஎஸ்கேவின் பேட்டிங் நிச்சயம் வலுவானதாக இருக்கும்.இதன் மூலம், சிஎஸ்கே 200 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version