தாய்லாந்தில் கோல்டன் டைகரைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்...!!
தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் நைட் சஃபாரிக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்குக் காரணம் அங்குள்ள தங்கப் புலிகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த தங்க நிற புலிகளை காணும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.
தங்க நிறத்தில் பூனைக்குட்டிகள் போல் காட்சியளிக்கும் அரிய வகைப் புலிகள் மக்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.
தங்கப் புலிக் குட்டிகளைக் காண பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
500 இருக்கைகள் கொண்ட அரங்கில் அனைத்து காட்சிகளுக்குமான நுழைவுச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தங்கப் புலிகள் இப்போது அழிவின் விளிம்பில் உள்ளன.
விலங்கியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுச்சூழலில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால், உலகில் ஒரு சில தங்கப் புலிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
Follow us on : click here