மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கிய பேருந்து……உடல்களை மீட்க சிரமம்பட்ட தீயணைப்பு வீரர்கள்…..

அக்டோபர் 3 ஆம் தேதி (நேற்று) இரவு, வடக்கு இத்தாலியில் வெனிஸ் நகருக்கு அருகே, 40 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

கீழே விழுந்த பேருந்து மின்சார கம்பிகளில் மோதி தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்தில் உக்ரேன், ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருந்ததாக கூறப்பட்டது.

பேருந்து முற்றிலும் நசுங்கியதால் அதில் சிக்கி இருந்த பல உடல்களை வெளியே எடுப்பதில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.

சமீப ஆண்டுகளில் இத்தாலி இது போன்ற பல கொடிய பேருந்து விபத்துகளை சந்தித்துள்ளது.

பிரதம மந்திரி மெலோனியா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தனது இரங்கலை தெரிவித்தார்.