சிங்கப்பூரில் கோவிட்-19 அப்டேட்!

சிங்கப்பூரில் மேலும் ஓராண்டுக்கு கோவிட்-19 கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கும் சட்டம் நீடிக்கப்படுகிறதாக சுகாதார மூத்த துணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கோவிட்-19 தற்காலிக நடவடிக்கைச் சட்டம் 2020 சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.இச்சட்டம் புதுவகைக் கிருமி பரவினால் அதனைக் கட்டுப்படுத்தி தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டம்.

இச்சட்டத்தின்படி புதிய கிருமி பரவினால் அதைத் தடுக்கவும், அதிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், அதனின் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கும் என்று கூறினார்.இதில் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடப்பில் இருந்த அதிரடி திட்டம் முதலிய நடமாட்ட கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் அதிகாரமும் அடங்கும் என்று தெரிவித்தார்.

தற்போது சிங்கப்பூர் கோவிட்-19 கிருமியோடு வாழ்வது என்ற நிலையை அனுசரித்தாலும் அதற்காக மெத்தனமாக இருக்க கூடாது என்றும் கூறினார்.சிங்கப்பூர் கடந்த மாதம் கட்டுப்பாடுகளைக் கைவிட முடிவு செய்ததையும் குறிப்பிட்டார்.அதில் பொதுப் போக்குவரத்தில் முககவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் கிருமி மேலும் எவ்வாறு உருமாறும் என்பதைப் பற்றி அறிய முடியாத நிச்சயமற்ற சூழ்நிலையே உலகமெங்கும் நீடிப்பதாக அவர் கூறினார்.