சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!!
சிங்கப்பூரில் அண்மை நாட்களாகவே கொரோனா நோய் தொற்று பரவல் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம்தெரிவித்துள்ளது.
நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தோர் எண்ணிக்கை சராசரியாக குறைந்துள்ளதாக கூறியது.
சுமார் 16,800 கொரோனா தொற்று சம்பவங்கள் ஜூன் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பதிவாகி உள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய வாரம் 17,400 ஆகா பதிவாகி இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் சராசரி தினசரி எண்ணிக்கை சுமார் 300 லிருந்து முதல் 136 ஆக குறைந்துள்ளது.
கடைசியாக தடுப்பூசி போட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆனவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு அமைச்சகம் ஊக்குவிக்கிறது. குறிப்பாக நோய் தொற்று எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Follow us on : click here