சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலை நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டதால் இனி, கோவிட்-19 சிறப்பு நோய் பட்டியலில் வகைப்படுத்தப்படாது.
கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் C- பிரிவு வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்றால் Medishield life நிதி உதவிகளும் போக 700 வெள்ளி கட்டணம் செலுத்தப்பட நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த கட்டண மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று சுகாதாரத் துறை மூத்த நாடாளுமன்ற செயலாளர் Rahayu மஹ்ஸாம் அவருடைய கணிப்பை முன் வைத்தார்.
இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அவர்கள் தற்போது இருக்கும் Medishield life,Medisave, Medifund போன்ற திட்டங்களைப் பயன்படுத்தி கட்டண செலவுகளில் ஒரு பகுதியை நோயாளிகள் செலுத்திக்கொள்ளலாம்.
சிகிச்சைப் பெற பலதுறை மருந்தகத்துக்குச் செல்வோர் அதிகபட்சமாக 35 வெள்ளி செலுத்த வேண்டி கூட வரலாம்.
இதே தொகையை சுவாசப் பிரச்சினை தொடர்பான மற்ற நோய்களுக்கும் வசூலிக்கப்படும்.
கிருமி நோய் தொற்று நிலவரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த நடைமுறைகள் அதற்கேற்ப பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.