Latest Singapore News

மீண்டும் சிங்கப்பூர் பிரதமருக்கு கோவிட்-19!தற்காலிக பிரதமர் யார்?

மீண்டும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனை தனது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்.

பிரதமர் பணியில் இல்லாத போது தற்காலிக பிரதமராக துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் பதவி வகிப்பார்.

சிங்கப்பூருக்கு இன்று வருகை புரியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீஸ்யை (Anthony Albanese) தற்காலிக பிரதமர் லாரன்ஸ் வோங் வரவேற்று சந்திப்பார்.

சிங்கப்பூர் ஆஸ்திரேலியா தலைவர்களுக்கான எட்டாவது ஆண்டு சந்திப்பு இன்று நடைபெறுகிறது.

அதனைப் பற்றிய விவரங்களை பிரதமர் அலுவலகம் நேற்று(ஜூன் 1)வெளியிட்டது.