உருமாற்றமடைந்த கோவிட் – 19 ஒமிக்ரான் வகை காரணிகளை கட்டுபடுத்த “Spikevax ” என்னும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை அங்கீகரித்தது சிங்கப்பூர்.
வரும் நாட்களில் முந்தைய காலகட்டத்தை விட சிங்கப்பூரில் , உருமாறப்பட்ட கோவிட் – 19 ஒமிக்ரான் வகை வைரஸின் தாக்கம் மக்களிடையே பரவ அதிக வாய்ப்புள்ளது.
மேலும் , EG.5 மற்றும் HK.3 என்ற உருமாறப்பட்ட கோவிட் – 19 ஒமிக்ரான் வகை காரணிகளால் மக்களிடையே நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார்.
சிங்கப்பூர் அரசு அதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வகை தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது.
கடந்த மாதம், ” Pfizer – BioNTech ” – இன் “Comirnaty” தடுப்பூசியானது HSA ( Health Science Authority) சுகாதார அறிவியல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையில் இரண்டாவதாக HSA – ஆல் இந்த தடுப்பூசி அங்கீகார ஒப்புதல் பெற்றுள்ளது.
நவம்பர் மாத இறுதிக்குள் உபயோகத்திற்கு வர வாய்ப்புள்ளதை எதிர்பார்க்கலாம்.”Spikevax” என்னும் மேம்படுத்தப்பட்ட கோவிட் – 19 தடுப்பூசி , மேலும் இந்த தடுப்பூசி கோவிட் – 19 தடுப்பூசி நிபுண குழுவால் தரம் பார்க்கப்பட்டு வருகிறது.அதன்பின் இந்த புதிய தடுப்பூசிகளை குறித்த பரிந்துரைகளையும் வழங்கும் என்று சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்தது.
இதனை ஆறு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயத்தினருக்கும் வழங்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.