சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!!

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. உயர்ந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உள்ளூர் மருந்தகங்கள்,மருந்து மாத்திரைகளின் இருப்பை அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் covid-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் சளி,இருமல் நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றின் புதிய அலையானது தொடக்கத்தில் இருப்பதாகவும் வரும் இரண்டு மூன்று வாரங்களில் அது உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொது இடங்களுக்கு மக்கள் கூடும் பொழுது முக கவசம் அணியுமாறும், 60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு UniHealth மருந்தகத்தால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருந்தகத்தின் 3 கிளைகளிலும் ஒவ்வொரு நாளும் சுமார்
20 க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாக கூறப்படுகிறது.

நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் நோய் பரவலின் தீவிரத்தால் அனைத்து மருந்தகங்களும் மருந்து மாத்திரைகளின் இருப்பை சேகரித்து வைத்து கொள்கிறது.

பள்ளி விடுமுறை காலம் என்பதால் பலர் வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் கிருமி பரவல் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

மேலும் இணைய வழியில் சேவை வழங்கும் white coat மருத்துவ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் கூடியுள்ளதாக கூறியது.

மக்கள் கிருமி பரவலில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். மேலும் தொற்று ஏற்படாமல் இருக்க முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.