இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!!

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்...!!

முட்டையை வேக வைக்கும் போது கரு உடையாமல் இருக்க ஒரு துளி வினிகர் சேர்த்து வேக வைத்தால் கரு உடையாது.

🥗கிழங்கை வேகவைக்கும் பொழுது உப்பு சேர்த்து வேக வைக்க கூடாது.

🥗வத்த குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரிக்காய்,கொத்தவரங்காய் போன்றவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.


🥗வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்தால் நெய் மணமாக இருக்கும்.

🥗உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது சிறிது பயத்த மாவு தூவி பொரிக்கும்போது சிப்ஸ் மொறு மொறுவென இருக்கும்.

🥗பூரி நமந்து போகாமல் இருக்க மாவு பிசையும் போது சிறிது சக்கரை சேர்க்கவும்.


🥗கடலைமாவை புளித்த தயிருடன் கலந்து சேப்பக்கிழங்கு துண்டில் தடவி ரோஸ்ட் செய்யும் போது மொறு மொறுவென இருக்கும்.

🥗பாகற்காய் துண்டுகளை நறுக்கி உப்பு கலந்து 10 நிமிடம் ஊற வைத்து பின்பு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.


🥗பொரியலுக்கு தூவ தேங்காய் இல்லாத போது புழுங்கல் அரிசியை பொறித்து பொடி செய்து தூவினால் தேங்காய் சேர்த்த சுவை கிடைக்கும்.

🥗கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டி தயிரை சேர்த்தால் கத்திரிக்காய் கருப்பாகாமல் இருக்கும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg