சீன ஊடகங்களில் வெளியான ஜூனியாவ் விமானம் குறித்த சர்ச்சை வீடியோ...!!
விமான பயணத்தின் போது இரண்டு பெண் பயணிகள் குழந்தையை கழிவறைக்குள் வைத்து பூட்டுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இரண்டு பெண்களில் ஒருவரான கோ திங்திங், தான் எடுத்த வீடியோவை சீன சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
ஜூனியாவ் விமானம் கடந்த வாரம் ஆகஸ்ட் 24 அன்று சீனாவின் குய்யாங்கிலிருந்து புறப்பட்டு ஷாங்ஹாய் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் தாத்தா பாட்டியுடன் ஒரு வயது குழந்தை பயணம் செய்தது. அவர்கள் மூன்று மணி நேரம் மேற்கொள்ள வேண்டிய பயணத்தில் அந்த குழந்தை தொடர்ந்து அழுததாக கூறப்பட்டது.
இதனால் பெண் பயணி ஒருவர் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை கழிவறைக்குள் வைத்து பூட்டுகிறார்.
அழுகையை நிறுத்தினால்தான் கழிவறையை விட்டு வெளியே வரமுடியும் என்று இன்னொரு பெண் பிள்ளையிடம் கூறுவதை வீடியோவில் காணலாம்.
சக பயணிகளின் நலன் கருதி அவர் உதவ முன்வந்ததாக கூறினார்.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பலரும் அவரை விமர்சித்தனர்.
குழந்தைக்கு பாடம் கற்பிக்கும் நோக்கில் குழந்தையின் பாட்டி அனுமதி வழங்கியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஒரு நாள் கழித்து, விமர்சனங்கள் அதிகரித்ததால், விமானத்தின் வாடிக்கையாளர் சேவைத் துறை இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியது மற்றும் “பணியாளர்களின் மேற்பார்வை” மற்றும் இரண்டு பயணிகளின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்ததாகக் கூறியது.
Follow us on : click here