சர்ச்சைக்குரிய ஓவியம்..!! கட்டிட உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட $2000 அபராதம்..!!

சர்ச்சைக்குரிய ஓவியம்..!! கட்டிட உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட $2000 அபராதம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுனில் உள்ள சுவரோவியத்தில் புகைபிடிக்கும் இளம் சம்சுய் பெண்ணின் உருவம் மாறாமல் உள்ளது.

இந்த சர்ச்சைக்குரிய சுவரோவியம் சமீபத்தில் பொது மக்களிடையே அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பாக நகர்ப்புற சீரமைப்பு ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அனுமதியின்றி ஓவியம் வரைந்ததற்காக கட்டிட உரிமையாளருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுமதி பெறாமல் பாதுகாக்கப்பட்ட கட்டிடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

சுவரோவிய பணிகளை தொடங்குவதற்கு முன் ஒப்புதல் பெற வேண்டும் என ஏற்கனவே நினைவூட்டப்பட்டது.எனினும் அவற்றை கண்டுகொள்ளாமல் கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சுவரோவியம் முடிந்த பின்னரே பாதுகாப்பு விண்ணப்பம் ஏப்ரல் 11 அன்று சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்சுய் சிகரெட் புகைக்கும் பெண்ணின் ஓவியத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது
.

அந்த ஓவியம் சிகரெட் புகைப்பதை சாதாரண ஒன்றாக காட்டுகிறது.ஆனால் இது போன்று சித்தரிப்பு சுகாதார அமைச்சின் கொள்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளது.