தெம்பனிஸ் பகுதியில் கொள்கலன் மீன் பண்ணை!! தற்போது மீன்கள் விற்பனைக்கு!!
கடந்த மாதம் தெம்பனிஸ் பகுதியில் ஒரு கொள்கலனில் ஒரு மீன் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வசிப்பவர்கள் இப்போது அதே பகுதியில் உள்ள மீன் பண்ணையிலிருந்து புதிய மீன்களை வாங்கலாம்.
6 மாதங்களாக வளர்க்கப்பட்ட மீன் வகைகள் தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளது .
கொள்கலன் மீன் பண்ணை மற்றும் ஈரச்சந்தை 50 மீட்டர் தொலைவில் உள்ளது.
இதனால் அங்குள்ள மக்களுக்கு புதிய மீன்கள் கிடைப்பது எளிதாகி விட்டது.
புதிய மீன்களை வாங்கி சமைக்கும் வாய்ப்பும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது.
Jade Perch மீன் வகையை வளர்ப்பதற்கு ஏற்ற சூழலை இந்த பண்ணை உருவாக்கியுள்ளது.
இது போன்ற சூழலில் வளர்க்கப்படும் மீன்கள் குளங்களில் வளர்க்கப்படும் மீன்களை விட அதிக சத்தனாவை என்று கூறுகிறது.
ஈரச்சந்தைக்கு முதல்முறையாக மீன் விநியோகிக்கும் நிகச்சி நேற்று நடைபெற்றது.
இதில் தெம்பனிஸ் குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூர் அதன் உணவு பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு தெம்பனிஸ் பகுதியில் பங்களிப்பாக இந்த முயற்சி இருக்கும் என்று கருதப்படுகிறது.
Follow us on : click here