சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு கட்டுமான நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 44 பில்லியன் வெள்ளி மதிப்புடைய திட்டப்பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 47 பில்லியன் வெள்ளி முதல் 53 பில்லியன் வெள்ளி மதிப்புடைய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றின் காலத்தில் காலதாமதமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

கழக,தனியார் வீட்டு கட்டுமானம்,சாங்கி ஐந்தாம் முனையம் போன்ற பெரிய திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டு கட்டுமானத் துறைக்கு பொலிவூட்டும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 75000 மேற்பட்ட BTO வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டுக்குள் 100000 BTO வீடுகள் என்ற இலக்கை தாண்டி செல்வதற்கு கழகம் திட்டமிடுகிறது.

வீடுகளுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சாங்கி ஐந்தாம் முனையம் கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் மரினா பே சாண்ட்ஸ் நான்காம் ஹோட்டலுக்கான கட்டுமான நடவடிக்கைகளும் விரைவில் துரிதப்படுத்தப்படும்.

புதிய சமூகக்கூடங்கள், கழிவு மேலாண்மை நிலையம், பள்ளிகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பெரிய திட்டங்கள் வரவுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை 39 பில்லியன் வெள்ளி முதல் 46 பில்லியன் வெள்ளி மதிப்புடைய கட்டுமானத் திட்டங்கள் தொடங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan