சிங்கப்பூரின் நான்காவது முட்டை பண்ணையின் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நான்காவது முட்டைப் பண்ணையின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் செயல்படத்
திட்டமிட்டிருந்த நிலையில் கோவிட் பரவல், விநியோக நடவடிக்கைகளில் உள்ள சிக்கல்கள், விலை உயர்வு போன்ற சில காரணங்களால் தாமதமாகியுள்ளது.
முட்டை பண்ணையின் கட்டுமான பணிக்கு 100 மில்லியன் வெள்ளி தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது அதற்கு 110 மில்லியன் வெள்ளிக்கு மேல் தேவை என்று கூறப்படுகிறது.
எலிப்சிஸ் இன்ஜினியரிங் அண்ட் சர்வீசஸ் அக்டோபரில் நடைபெற்ற 2வது பொதுக் கூட்டத்தில் இந்த விவரங்களை வழங்கியது.
நான்காவது பண்ணையின் நான்கு நிலையங்களை லிம் சூ காங், சுங்கை தெங்கா மற்றும் துவாஸ் ஆகிய பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது முடிந்தவுடன், ஆண்டுக்கு 360 மில்லியன் முட்டை உற்பத்தியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள பண்ணையினால் உள்ளூர் தேவை 30 சதவீதம் வரை நிறைவேறுகிறது.
ஆனால் மேலும் பண்ணைகள் திறக்கப்படும் பட்சத்தில் உள்நாட்டில் தேவைப்படும் முட்டைகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் வரை உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg