நேற்று ஜனவரி,13-ஆம் தேதி சிங்கப்பூரில் 7-வது பெருவிரைவு ரயில் பாதையின் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. பெரு விரைவு ரயில் பாதையான ஜூரோங் வட்டார (JRL)பாதையில் கட்டுமான பணி தொடங்கியது.Boon Lay,Choa Chu Kang,Jurong East ஆகிய மூன்று முனையங்கள் அதில் அடங்கும் என்று கூறினர். இதில் 24 பெருவிரைவு ரயில் நிலையங்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) இது குறித்து தெரிவித்துள்ளது.அதாவது, சிங்கப்பூரின் மேற்பகுதியில் மேம்படுத்தப்படும் போக்குவரத்து இணைப்புகளால் ஜீரோங்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனை 2027 முதல் 2029 வரை மூன்று கட்டடங்களாகத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். ஜீரோங் வட்டார பாதை 2029-ஆம் ஆண்டில் முழுமையாகத் திறக்கப்படும். இதனால் பயணிகளின் பயண நேரம் குறையும். பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்றும் ஆணையம் கூறியது.
ஜீரோங் வட்டாரத்தில் பெருவிரைவு ரயில் சேவை இல்லாத பகுதிகள் ஜீரோங் பெருவிரைவு இணைக்கும். அதில் Gek Poh,Pandan Gardens போன்ற பகுதிகளும் இணைக்கப் படும் என்று ஆணையம் தெரிவித்தது.ஜீரோங் வட்டார பாதை நிலையங்களில் சூரிய சக்தியை பயன்படுத்தப் பட உள்ளது.அதனைக் கொண்டு இயற்கை எரிச்சக்தி மூலமாக நிலையங்கள் செயல்படும்.
அதனால், சூரிய தகடுகள் பொருத்தப்பட உள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் கூறினார். சுமார் 60,000 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவார்கள். அவர்கள் 10 நிமிடம் நடக்கும் தூரத்தில் ரயில் நிலையம் இருக்கும் என்றும் கூறினார்.