நவம்பர் 28ஆம் தேதி அன்று Penang-ல் கட்டுமானத்தில் இருந்த கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் மூன்று கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இரண்டு தொழிலாளர்கள் கடுமையான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இடிபாடுகளுக்கு அடியில் நான்கு தொழிலாளர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இறந்தவர்களில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கட்டிடம் இடிந்து விழுந்த போது 18 தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று காவல்துறைக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர்களில் ஒன்பது பேர் தொழுகைக்காக வெளியே சென்றதாக காவல்துறையிடம் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தை தொடர்ந்து கட்டுமான பணியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.