இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!!

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்...!!

திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) காலமானார்.

அவருக்கு 48 வயது.

இவருக்கு அர்ஷிதா மற்றும் மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

அவருக்கு தற்போது தான் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில் சேத்துப்பேட்டில் உள்ள வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

மனோஜின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது குடும்பத்தினருக்கு திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோஜ் 1999 ஆம் ஆண்டு “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் நடிகராக அறிமுகமானார்.

அவர் “சமுத்திரம்” மற்றும் “கடல் பூக்கள்” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மனோஜ் 2023 ஆம் ஆண்டு “மார்கழி திங்கள்” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் இளம் வயதில் மனோஜ் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.