சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு மேல் தாமதம் அடைந்ததால் பொங்கோலில் வீடு வாங்கிய சுமார் 900 குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் வெள்ளி திரும்ப வழங்கப்பட உள்ளதாக வீடமைப்பு வளர்ச்சி கழகம் தெரிவித்தது.
2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் Waterway sunrise II என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் 2021-ஆம் ஆண்டில் முடிவதாக இருந்தது. ஆனால்,கிருமி பரவல் காரணம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாலும் வீடுகளைக் கட்டி முடிக்க முடிய வில்லை.
வீட்டை ஒப்படைக்கும் தேதி தள்ளிப்போனதால் வீடமைப்பு வளர்ச்சி கழகம் தாமதத்துக்காக இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
சுமார் 900 குடும்பங்கள் 2021 -ஆம் ஆண்டு அக்டோபருக்குள் வீட்டைப் பதிந்து கொண்டவர்கள் இந்த இழப்பீடைப் பெற தகுதி பெற்றுள்ளனர்.
அவர்கள் வீட்டை வாங்கி முடித்து இரண்டு மாதங்களுக்குள் அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று கழகம் தெரிவித்தது.