Latest Singapore News

காகித பெட்டியில் உணவு வழங்கிய நிறுவனம்!எதிர்பார்த்த அளவு கிடைக்காத ஆதரவு!

Economy பிரிவுக்கான உணவு பிரிவில் சில உணவுகளை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

கிருமி பரவல் காலத்திற்கு பிறகு அதன் விமானங்களில் வழங்கப்படும் உணவு குறித்து விமர்சனங்கள் எழுந்தது.அதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூறியது.

காகிதப் பெட்டிகளில் உணவு வழங்கும் சோதனை முறையை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

ஆனால், அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்க வில்லை.

உணவின் தரம் குறித்து ஏப்ரலில் “Reddit´´ இல் இணைய வாசிகள் விவாதித்தனர்.

புகார்கள் அதிகரித்த நிலையில், இம்மாதம்(மே) தொடக்கத்தில் நிறுவனம் ஆண்டு வருமானம் குறித்து அறிவித்தது.இதுவரை இல்லாத அளவிற்கு 2.16 பில்லியன் வெள்ளி பதிவுசெய்திருப்பதாக அறிவித்தது.

நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறித்த தகவல் இணையவாசிகளிடையே அதிருப்தியை அதிகரித்தது.

இந்த விவகாரம் குறித்து CNA செய்தியிடம் SIA பேச்சாளர் பேசினார்.

`appetisers´ எனும் பசியைத் தூண்டும் உணவு வகைகள் வரும் ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து மீண்டும் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

நோய் பரவல் காலகட்டத்தில் உணவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட Cheese, Crackers,Muffins முதலிய உணவு மீண்டும் சேர்க்கப்பட உள்ளன.அதோடு அதிகமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறினார்.

செலவைக் குறைத்ததால்தான் உணவின் தரம் குறைந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதனை நிறுவனம் மறுத்தது.

உணவுக்கென ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்படவில்லை என்று கூறியது.

விமானத்தில் வழங்கப்படும் உணவுக்கு தற்போது 20 விழுக்காடு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.2019/2020 ஆண்டுடன் ஒப்பிட்டால் அது அதிகம் என்றார்.