சிங்கப்பூரில் பல நிறுவனங்கள் மூடப்பட்டது. மூடப்பட்ட நிறுவனங்களில் சேவைக்காக பொதுமக்கள் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி உள்ளனர். நிறுவனங்கள் மூடப்பட்டதால் அவர்கள் செலுத்திய பணத்தை அனைத்தையும் இழக்க நேரிட்டது.
சிங்கப்பூரில் சேவைக்காக முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி பலர் ஏமாந்துள்ளனர்.கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டுமே 645,000 வெள்ளியை இழந்துள்ளனர். இழந்ததில் பெரும் பகுதியான பணம் அழகு பராமரிப்பு நிலையம்,பயணத்துறை ஆகியவற்றில் பறி கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதற்கும் முந்தைய ஆண்டில் 520,000 வெள்ளியை இழந்துள்ளனர். சிங்கப்பூரில் நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதே இதற்குக் காரணம். இதனால் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தியவர்கள் அவர்கள் பணத்தை இழந்தனர்.
சிங்கப்பூரில் கடந்த 2022-ஆம் ஆண்டு பல வகை அழகு நிலையங்கள் மீண்டும் திறக்கவில்லை. இதனால் 285,000 வெள்ளிகளை இழந்துள்ளனர்.
இதனை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் விவரத்தைத் தெரிவித்தது. பொதுமக்கள் பயணம் செய்வதற்காகப் நிறுவனத்திடம் பணத்தைச் செலுத்தினார்கள். திடீரென்று நிறுவனங்கள் மூடப்பட்டது.
இதில் பொதுமக்கள் கடந்த ஆண்டு 141,000 வெள்ளித் தொகையை இழந்துள்ளனர். பொதுமக்களிடமிருந்து நிறைய புகார்கள் வந்தது. அதில் வீட்டைப் புதுப்பிக்கும் நிறுவனங்கள் முதலிடத்தில் இருக்கின்றது. பொதுமக்களிடமிருந்து கடந்த ஆண்டு வீட்டைப் புதுப்பிக்கும் நிறுவனங்கள் பற்றி 1,454 புகார்கள் வந்துள்ளது.