சிங்கப்பூரில் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளின் நிலத்தின் மதிப்பு அதன் ஆரம்பகால மதிப்பின் விலையை அடிப்படையைக் கொண்டு இருக்க வேண்டும் என்று பரிந்துரைச் செய்யப்பட்டு இருந்தது.இப்பரிந்துரைக் குறித்து டஸ்லன் லீ கருத்து தெரிவித்துள்ளார்.இப்பரிந்துரை நியாயமற்றது என்று அவர் கூறினார்.
தொகுதியிலா நாடாளுமன்ற உறுப்பினர் யாங் நாடாளுமன்ற அவைகளிலும், சமூக ஊடகங்களிலும் பரிந்துரைப் பற்றி கூறியுள்ளார்.அவர் கூறியது நம்பகதக்கதாக இல்லை என்று டஸ்லன் லீ கூறினார்.விடுவிப்பு வளர்ச்சி கழகத்தின் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடு களின் விலையை கட்டுபடியானதாக வைத்து இருக்க தேசிய வளங்கள் அதற்கு செலவிடப் படுவதாக லீ கூறினார்.
விற்கப்படும் வீடுகளை சந்தை நிலைவரத்தின் விலையில் விற்காமல் தொடக்க விலைக்கு அரசாங்கம் கழகத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்று யோங் கூறியுள்ளார்.இவ்வாறு செய்தால் குறைந்த விலையில் விற்கலாம் என்றும் யோங் கூறினார்.
நிலத்தின் விலையை தொடக்க விலைக்கு விற்றால் பல சிக்கல்களைக் கொண்டு வரும் என்று லீ கூறினார். சொத்துக்களின் மதிப்பீடுகள் இன்றைய சந்தைகளின் நிலவரம் அடிப்படையிலேயே பரிவர்த்தனைச் செய்யப்பட்டு வருகிறதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு எடுத்துக்காட்டாக பழைய தலைமுறை சிங்கப்பூரர்கள் குறைவான விலைக்கு வாங்கிய வீடுகளை அதே விலைக்கு விற்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.