காபி பிரியர்களே!! உஷார்!!

காபி பிரியர்களே!! உஷார்!!

சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் விற்கப்படும் காப்பித் தூளில் 2010ஆம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்ட Sibutramine மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அது உடல் எடையைக் குறைக்கும் மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

தடை செய்யப்பட்ட மருந்து இருக்கும் V-SHOU பிரீமியம் என்ற காபி தூள் பல இ-காமர்ஸ் தளங்களில் விற்கப்படுவதாக சிங்கப்பூர் உணவு ஆணையம் தெரிவித்துள்ளது.

இம்மாதிரியான உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sibutramine மருந்து எடுத்துக் கொள்ளும்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த காபி பவுடர் உடல் எடையை வேகமாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய வாரங்களில் Sibutramine இருப்பதாகக் கண்டறியப்பட்ட இரண்டாவது காபித் தூள் இதுவாகும்.