மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்...!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று நடைபெற்றது.

இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான கோகோ காப் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரி மோதினர்.

அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் மோதியதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த போட்டியில் 6-2, 6-4 என நேர் செட்களில் மரியா சக்காரியை வீழ்த்தி கோகோ காப் அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், கோகோ காப் 4வது சுற்றுக்கு (சுற்று 16) முன்னேறினார்.

இன்று நடைபெறவுள்ள 4 வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப் போலந்தின் மாக்டா லினெட்டாவை எதிர்கொள்ள உள்ளார்.

Exit mobile version