அக்டோபர் 28ஆம் தேதி அன்று கசகஸ்தானில் உள்ள Arcelor Mittal நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 சுரங்க தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவரை காணவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நாடு முழுவதும் ஞாயிற்றுகிழமை அன்று துக்கம் தினமாக அனுசரிக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் சுரங்கத்திற்குள் 252 பேர் இருந்ததாக நிறுவனம் கூறியது.
இந்த தீ விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த குறிப்பிட்ட சுரங்கத்தில் நடந்த பல கொடிய விபத்துகளுக்குப் பிறகு இந்த நிறுவனத்தை தேசியமயமாக்க ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தெரிவிக்கப்பட்டது.