மில்லியன் கணக்கில் விலைப்போன கழக வீடு!!

மில்லியன் கணக்கில் விலைப்போன கழக வீடு!!

Queenstown பகுதியில் உள்ள ஒரு கழக வீடு சுமார் 1.73 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டுள்ளது.

அதனை ERA Properties சொத்து முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SkyOasis@Dawson கழக வீடு 45-வது தளத்தில் இருக்கிறது.

அது 5 அறைகளைக் கொண்டது.

அந்த வீடு சுமார் 1195 சதுர பரப்பளவு கொண்டுள்ளது.

அது ஒரு சதுர அடிக்கு $1444 வெள்ளி என நிர்ணயக்கப்பட்டு விற்பனையானது.

வீட்டில் உயர்மான கூரை, மாடி என வசதிகளும் இருக்கிறது.

அதே பகுதியில் உள்ள தனியார் வீட்டை வாங்க நினைத்தால் கிட்டத்தட்ட 3 மில்லியன் வெள்ளி செலவாகும் என கூறப்படுகிறது.

அந்த வீட்டை வாங்கியவர்களுக்கு குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கு ஏதுவாக பரந்த இடம் உள்ளது. அதோடு அருகில் அவர்களுக்கு தேவையான வசதிகளும் இருப்பது அவர்களுக்கு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.