கொரோனா தடுப்பூசி எங்கு போடலாம் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!
நாம் நம்முடைய கடைசி பதிவில் கொரோனா தடுப்பூசி சிங்கப்பூர் செல்ல அவசியமா? இல்லையா?என்று பார்த்தோம்.இந்தப் பதிவில் கொரோனா தடுப்பூசி எங்கு போடலாம் என்று பார்க்கலாம்.
அதற்கு முன் இது போன்ற முக்கியமான தகவலை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ள நமது SGTAMILAN இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
சிங்கப்பூர் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை தற்போதும் உள்ளது. கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் பலர் சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவது தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதே இல்லை. இதனால் பல பேர் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளீர்களா என்பதை பெரிதளவில் கண்டு கொள்வது இல்லை. ஆனால் நமது தமிழ்நாட்டில் உள்ள ஏர்போர்ட்களில் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும்,அதன் சான்றிதழ் வேண்டும் என்றும் கேட்கின்றனர். உங்களிடம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லை என்றால் நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் போகும்.
தமிழ்நாட்டில் எங்கு தடுப்பூசி கிடைக்கிறது?
நீங்கள் கொரோனா தடுப்பூசி போட அலைந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால்,நீங்கள் சென்னையில் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் இப்போதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அங்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் நீங்கள் நல்லபடியாக சிங்கப்பூர் சென்று விடலாம்.
நீங்கள் சென்னை செல்வதற்கு முன்பாக விஜயா மருத்துவமனையை தொடர்பு கொண்டு தடுப்பூசி உள்ளதா? என்பதை அறிந்து கொண்டு அதன் பின் செல்லுங்கள்.சில நேரங்களில் அவர்களிடமும் தடுப்பூசியில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொண்டு சென்றால், தேவையில்லாத அலைச்சலை தவிர்க்கலாம்.
இது போன்று உங்களுக்கு தேவையான பதிவுகளை நாங்கள் கொடுத்து கொண்டே இருப்போம். எங்களது இணைய பக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg