சிங்கப்பூரில் மேம்படுத்தப்படவுள்ள கிளெமண்டி மைதானம்!!
சிங்கப்பூரில் உள்ள கிளெமண்டி மைதானம் மீண்டும் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளுடன் புதிய மைதானம் வரவுள்ளதாக தேசிய மேம்பாட்டு அமைச்சரான டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் PAssion Arts Festival 2024 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சி வெஸ்ட் கோஸ்ட் சமூக மையத்தில் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக கிளெமண்டி ஸ்டேடியம் மேற்கு கடற்கரையின் ஒரு முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
தற்போது அதன் கட்டமைப்புகளை மறுசீரமைக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று கூறினார்.
2030-ஆம் ஆண்டுக்குள் கிளெமண்டி ஸ்டேடியத்தின் புதுப்பிப்பு பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்டேடியத்தில் சாப்ட்பால் மற்றும் பேஸ்பால் மைதானங்கள் இடம்பெறும். பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும்,கற்றுகொள்வதற்கான வகையிலும் இன்னும் மற்ற விளையாட்டு வசதிகள்,ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவைகளும் இடம்பெறும் என்று அவர் கூறினார்.
மேலும் யியோ சூ காங் மற்றும் பெடோக் ஆகிய பழமையான மைதானங்களும் மறுசீரமைக்கப்படுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அங்கு புதிய MRT நிலையம் தொடங்கப்படவுள்ளதைப் பற்றியும் பேசினார்.இதன் மூலம் குடியிருப்பாளர்கள் ஷாப்பிங் உட்பட பிற வசதிகளுக்கும் சுலபமாக செல்ல முடியும் என்று கூறினார்.
Follow us on : click here