புக்கோம் தீவில் கசிந்த எண்ணெயை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்…!!

புக்கோம் தீவில் கசிந்த எண்ணெயை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்...!!

சிங்கப்பூர்: புக்கோம் தீவின் கடற்பகுதியில் எண்ணெய் மற்றும் நீர் கசிவை சுத்தம் செய்ய ஷெல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக சிங்கப்பூர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஷெல் நிறுவனத்தின் நிலத்தடி என்னை குழாயில் கசிவு ஏற்பட்டதால் 30 முதல் 40 மெட்ரிக் டன் எண்ணெய் கடலில் கலந்தது.

எண்ணெய்ப் படலங்களை அடையாளம் காண ஆளில்லா வானூர்திகளும் செயற்கை கோள்களும் பயன்படுத்தப்பட்டன.

நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, புலாவ் புக்கோம் மற்றும் புக்கோம் கெச்சில் இடையே எண்ணெய் படலம் தென்பட்டது.

இது வேறு எங்கும் பரவியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமைப்புகள் தெரிவித்தன.

சிங்கப்பூர் கடல்சார் ஆணையம், துறைமுக ஆணையம் (MPA), தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA), தேசிய பூங்காக் கழகம் (NParks), தேசிய நீர் ஆணையம் (PUB), Sentosa Development Corporation (SDC), சிங்கப்பூர் உணவு ஆணையம் (SFA), சிங்கப்பூர் நில ஆணையம் (SLA) ) , JTC, கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) கூட்டாக அறிவித்தது.

சாங்கிக்கு அப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.