தீ விபத்தால் மீண்டும் பாதிப்பிற்குள்ளான வட்டப்பாதை ரயில் சேவை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ரயில் பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று (செப்டம்பர் 18) வட்டப்பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) மின்கசிவு காரணமாக வட்டப்பாதையில் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இது சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு வழக்க நிலைக்கு ரயில் சேவை திரும்பியது.
இந்நிலையில் SMRT, கிம் சுவான் ரயில் பணிமனையில் நேற்று( செப்டம்பர் 18) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தால் வட்டப்பாதையின் மின்சாரம் தடைபட்டதாகக் கூறியது.
இதனை SMRT தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதனால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
சில ரயில்களில் விளக்குகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த பொறியாளர்கள் தீயை அணைத்ததாக SMRT தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவு 8.10 மணியளவில் மின்தடை சரி செய்யப்பட்டது.
சுமார் 8.15 மணியளவில் ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
SMRT இடையூறுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது.
2 நாட்களில் 2 முறை வட்டப் பாதையில் இடையூறு ஏற்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.
Follow us on : click here