காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

காரிலேயே உலகம் சுற்றும் சீன வாலிபர்..!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்...!!!

சீனாவில் இருந்து சிங்கப்பூருக்கு கார் ஓட்டிச் சென்றவர் மீது நெட்டிசன்களின் கவனம் திரும்பியுள்ளது.

சீனாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று சிங்கப்பூர் சாலையில் செல்லும் புகைப்படத்தை இணையவாசி ஒருவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

அதில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு அருகில் சீனாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று செல்வதைக் காணலாம்.

சிங்கப்பூர் வரை சீன நாட்டவர் காரை ஓட்டி வந்தது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ஓட்டுநர் ஜேசன் வன் பின்னர் Xiaohongshu தளத்தில் ஒரு இடுகையில் விவரங்களை வழங்கினார்.

சீனாவின் யுனான் பகுதியில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் செல்லும் வழியில் லாவோஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக அவர் கூறினார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் பலர் காரில் பல நாடுகளுக்குச் செல்ல எவ்வளவு செலவானது? அவர் எப்படி மின்சார காரில் இவ்வளவு தூரம் பயணம் செய்தார்..?? என்பது போன்ற பல கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

மேலும் சில நெட்டிசன்கள் அவரது முயற்சியை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.