சீனப் புத்தாண்டு!! புத்தம் புதிய நோட்டுகளுக்கு ஆன்லைனில் எப்போது விண்ணப்பிக்கலாம்!!
சீனப் புத்தாண்டின் போது வழங்கப்படும் அன்பளிப்பு பைகளில் வைத்து கொடுக்கப்படும் பண நோட்டுகளைப் பெற விரும்புவோர் உள்ளூர் வங்கியில் இந்த மாதம் 7 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) புத்தம் புதிய நோட்டுகளை பதிலாக பொதுவாக சுத்தமான மற்றும் அன்பளிப்புக்கு அளிக்கக்கூடிய பண நோட்டுகளைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஓர் பகுதியாக இத்தகைய நோட்டுகள் வெளியிடப்படுகிறது.
சென்ற ஆண்டு 11.7 மில்லியனுக்கும் அதிகமான அன்பளிப்புக்கு உகந்த பண நோட்டுகள் கை மாறியதாக கூறப்படுகிறது.
மக்கள் மின்னிலக்க முறையில் அன்பளிப்பு பணத்தை வழங்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
Follow us on : click here